Tuesday, January 29, 2008

417. கடவுளும் காலணியும்

டிசம்பரின் ஒரு மாலைப் பொழுதில், ஒரு பத்து வயதுச் சிறுவன்,  செருப்பறியா பாதங்கள் கடுங்குளிரில் நடுங்க, ஒரு காலணிக் கடையை கண்ணாடி சன்னல் வழியாக வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.  அவ்வழியே வந்த நடுத்தர வயது பெண்ணொருத்தி அச்சிறுவனிடம், "என்ன, ஏதோ பலமான யோசனையில் உள்ளது போல் தெரிகிறதே!" என்றவுடன், அவன், "எனக்கு ஒரு ஜோடிக் காலணிகளை வாங்கித் தருமாறு கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்!" என்று கூறினான்.

சிறுவனின் கையைப் பிடித்து, அக்காலணிக் கடைக்குள் அழைத்துச் சென்ற அப்பெண், கடைக்காரரிடம் அச்சிறுவனுக்கு டஜன் காலுறைகள் எடுத்து வருமாறு கூறியதோடு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், டவலும் தரும்படி கேட்டுக் கொண்டார்.  தனது கையுறைகளை நீக்கி விட்டு, குனிந்து சிறுவனின் சிறிய பாதங்களை தண்ணீரால் சுத்தம் செய்து துடைத்து விட்டார் அப்பெண்மணி.

அதற்குள், கடைக்காரர் சிறுவனுக்கான காலுறைகளுடன் வந்து விட்டார். அவற்றில் ஒரு ஜோடியை அப்பெண்மணி சிறுவனுக்கு அணிவித்து விட்டு, அவனுக்கு விலை உயர்ந்த ஒரு ஜோடிக் காலணிகளையும் வாங்கிக் கொடுத்தார். மற்ற காலுறைகளையும் ஒரு பையில் இட்டு சிறுவனிடம் தந்து விட்டு, அவன் தலையைத் தடவி, "நிச்சயம் இப்போது உனக்கு சற்று சௌகரியமாக இருக்க வேண்டும், இல்லையா?" என்று கூறினார்.

சிறுவனுக்கு விடை கொடுத்த சமயத்தில், மிக்க பிரமிப்பில் இருந்த அவன், அப்பெண்மணியின் கைகளைப் பற்றி, கண்களில் கண்ணீருடன் அவரை ஏறிட்டு நோக்கிக் கேட்டான், "நீங்கள் கடவுளின் மனைவியா ?"

எ.அ.பாலா

7 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

Unknown said...

நல்ல அருமையான கதையை இப்படி முடிச்சீட்டீங்களே?
'நீங்கள் கடவுளின் மனைவியா?' என்பதை
'கடவுளும் பெண்தானா?'
என்று முடித்திருக்கலாமோ.

ச.சங்கர் said...

கொடுக்கும் கடவுள் என்றால் அது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என பூடகமாக எழுத முயன்றுள்ள பாலாவின் ஆணாதிக்க மனோபாவத்தைக் கண்டிக்கிறேன் :)

enRenRum-anbudan.BALA said...

சுல்தான்,
கருத்துக்கு நன்றி.
//'நீங்கள் கடவுளின் மனைவியா?' என்பதை
'கடவுளும் பெண்தானா?'
என்று முடித்திருக்கலாமோ.
//
10 வயது ஏழைச் சிறுவன், அப்பெண்ணின் தயாள குணத்தைக் கண்டு பிரமித்து எத்தகைய கேள்வி கேட்கக் கூடும் எனும்போது, 'நீங்கள் கடவுளின் மனைவியா?' என்பது பொருத்தமாக இருப்பது போலத் தெரிகிறது ! "கடவுளும் பெண் தான்" என்பது இலக்கியவாதி லெவலில் உள்ளது :)))

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
//கொடுக்கும் கடவுள் என்றால் அது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என பூடகமாக எழுத முயன்றுள்ள பாலாவின் ஆணாதிக்க மனோபாவத்தைக் கண்டிக்கிறேன் :)
//
ஏனப்பா, நேர்மறையா யோசிக்க மாட்டீங்களா ? ;-) நன்றி.

Aruna said...

குழந்தைகளின் மனம் தெரிகிறது கதையில்.....
அன்புடன் அருணா

said...

Nice story. You know, still there are millions of children in the world who doesn't have a pair of shoe.Hope some one like her is helping every now and then.

with best
CT

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails